வியாழன், 20 ஆகஸ்ட், 2009
உன்னதமான குடும்ப உறவுகள்
இந்தியாவில் குடும்ப உறவுகள் மிக உன்னதமானவை என்று சொல்லப்படுகின்றன. மேலைநாடுகளில் தனித்தனியாகத்தான் இருப்பார்கள். இந்தியா போன்ற கீழைநாடுகளில்தான் குடும்பம் குடும்பமாக இருக்கிறார்கள். இவர்களுடைய சிந்தனையே கூட்டம் கூட்டமாகத்தான் இருக்கும். அதாவது ஒரு மனிதன் தானாக சுதந்திரமாக சிந்திக்க முடியாது. அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், தம்பி, மனைவி, பிள்ளைகள் என்று எல்லோருடைய சிந்தனையும் கலந்து(தன்னுடைய சிந்தனை எது என்றே சில சமயம் தெரியாமல் போய்விடும்)தான் சிந்திக்க முடியும். அவனுடைய நடவடிக்கைகள் கூட அவன் விரும்பியபடி இருக்காது. அதிலும் அம்மா அப்பா என்று ஒரு கூட்டமே குறுக்கிடும். மொத்தத்தில் சிந்தனையிலோ செயலிலோ அவனுக்கு எந்தவிதமான சுதந்திரமும் இருக்காது.ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், இதற்கு யார் என்ன சொல்வார்களோ என்ற சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும். இது ஒரு வகையில் அராஜகமான சூழ்நிலைதான். பிறகென்ன, ஒரு மனிதன் சுயமாக சிந்திக்க முடியாது. சுயமாக இயங்க முடியாது என்றால் பிறகு அவன் எதற்கு இந்த பூமியில். ஒருவனுடைய நடவடிக்கைகளையும் சிந்தனைகளையும் மிரட்டி ஒடுக்கினாலும் பாசம் என்ற பெயரில் ஒடுக்கினாலும் ஒன்றுதானே.ஆனால் இந்த அராஜகத்தை விரும்பாவிட்டாலும் பெரும்பாலானவர்கள் இதை விட்டு வெளியே வருவதில்லை. காரணம் கூட்டத்தில் ஒருவராக இருப்பதில் ஒரு பாதுகாப்பு இருக்கிறது.தனியாக இருந்தால் அதில் பல்வேறு ஆபத்துக்கள் இருக்கின்றன. சொந்தமாக ஏதாவது செய்தால் அவனது செயல்களால் வரும் தீமைக்கும் நன்மைக்கும் அவனே பொறுப்பு என்று ஆகி விடுகிறது. இதனால் ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதில் இருந்து அவனே கையூன்றி தப்பித்து எழுந்து வர வேண்டியிருக்கிறது. அவனது தேவைகள் அனைத்தையும் அவனே சொந்தமாக நிறைவேற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது.ஆனால் குடும்பத்தில் ஒருவராக கூட்டத்தில் ஒரு அங்கமாக இருந்தால் பிரச்சனை இல்லை. எல்லாவற்றையும் யாரோ பார்த்துக்கொள்வார்கள். அக்கடா என்று இருக்கலாம். இதனால் தேவையற்ற மன உளைச்சல்கள் ஏற்படுவதில்லை.மேலை நாடுகளில் ஒரு குறிப்பிட்ட வயதில் இருந்து அவரவர் வாழ்க்கைக்கு அவரவரே பொறுப்பு என்ற சூழல் நிலவுகிறது. அவர்களது பண்பாடே அப்படித்தான். அப்பாவாக இருந்தாலும் சரி. அம்மாவாக இருந்தாலும் சரி. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பிள்ளைகளின் வாழ்க்கையில் அத்து மீறி மூக்கை நுழைக்க மாட்டார்கள். ஆனால் அங்கெல்லாம் குடும்பம், நட்பு, உறவு என்பது இல்லாததால் பெரும்பாலானவர்கள் மன உளைச்சலுக்கும் விரக்திக்கும் உள்ளாகின்றனர். எனவே இந்தியா போன்ற நாடுகளில் உள்ள குடும்ப உறவுகள், சாதி உறவுகள், மத உறவுகள் பேணிப்பாதுகாக்க வேண்டியவை. மொத்தத்தில் கூட்டத்தி¢ல் ஒருவராக இருப்பது நல்லது. தன்னந்தனியாக சிங்கம் போல திரிந்து எங்காவது ஆபத்தில் மாட்டிக்கொள்வதை விட, ஆட்டு மந்தையில் ஒரு ஆடாக மேய்ந்து கொண்டிருப்பது சிறந்தது என்று இந்தியாவில் உள்ள சில பண்பாட்டு பாதுகாவலர்கள் கூறி வருகின்றனர்.உண்மையில் இங்குள்ள குடும்ப உறவுகளை தொடர்ந்து பேணிப்பாதுகாப்பதில் வரக்கூடிய மன உளைச்சல்கள், தன்னந்தனியாக சுற்றித்திரியும் போது ஏற்படும் மன உளைச்சல்களைக் காட்டிலும் அதிகம். தனியாக திரியும் போது ஒருவனுக்கு ஏற்படும் மன உளைச்சல் அவனால் மட்டுமே ஏற்படும். அதற்கு தீர்வையும் அவனிடமே தேடிக்கொள்ளலாம். ஆனால் கூட்டமாக திரியும் போது மன உளைச்சல்கள் பல திசைகளில் இருந்தும் வரும். தீர்வையும் அவன் பலர் மூலம்தான் தேட முடியும். மற்றொரு விஷயம். குடும்பம் என்ற சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் தனித்தனியாக திரியும் மேலை நாட்டுப் பண்பாட்டில் நல்லதோ கெட்டதோ முடிந்தவரையில் அவர்கள் அச்சு அசலாக உண்மையாக இருக்கிறார்கள். நம்மூரில் ஆகா உன்னதமான குடும்ப அமைப்பில் உறுப்பினர் என்று சொல்லிக்கொண்டு முடிந்தவரையில் நடிக்கிறார்கள்.
புதன், 12 ஆகஸ்ட், 2009
விளிம்பில் இருந்து ஒரு குரல்............
ஷக்ரி என்ற எழுத்தாளரை பற்றி சாருநிவேதிதா அவரது இணைய தளத்தில் எழுதியிருந்தார். அதை படித்த பின் அவருக்கு அனுப்பிய கடிதம் இது.
நாமெல்லாம் (உங்களை இதில் சேர்த்துக்கொள்ளலாமா தெரியவில்லை) வேலைக்கு போய் மாதச்சம்பளம் வாங்கி, திருமணம¢ முடித்து, பிள்ளைகள் பெற்று படிக்கவைத்து, அவர்களுக்கு திருமணம் முடித்து, பேரன் பேத்தி பார்த்து கடைசியாக இறந்து போகும் மனிதர்கள். கொஞ்சம் கடந்தால் அரசியல் தெரியும். அதில் கலைஞர், புரட்சி தலைவி, புரட்சிகலைஞர் போன்றவர்கள் வருவார்கள். அதையும் கொஞ்சம் கடந்தால் சிபிஎம், சிபிஐ வரும். இன்னும் கடந்தால் எம் எல் கட்சி வரும். எம்எல் கட்சி நக்சல்பாரி கட்சி, இப்போது லால்கார் கட்சியாகி விட்டது. இரண்டுமே மேற்குவங்கத்தில் உள்ள ஊர்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். இப்படிக்கடந்து கொண்டே போகும் போது, மற்ற மனிதர்களைப் போல நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்போம். மற்ற மனிதர்களைப் போல வீடு வாசல் கனவுகள் இல்லாமல் இருப்பபோம். மற்ற மனிதர்களைப் போல திருமணம் என்ற பந்தத்தில் சிக்காமல் அல்லது சிக்கியிருந்தாலும் அதில் இருந்து அறுத்து வெளியே வந்திருப்போம். அறுக்க முடியாவிட்டால், மனைவியிடம் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை கைகழுவி விட்டு, நாம் பாட்டுக்கு இந்தியாவில் புரட்சி நடத்துவதற்காக ஏதேனும் அறைக்கூட்டத்தில் கலந்து கொண்டிருப்போம்.இலக்கியத்திலும் இதுபோன்ற கடந்து செல்லுதல் உண்டு. அடுக்கு மொழி மரபுக்கவிதைகள் கடந்து புதுக்கவிதை வந்து........ உரை நடை இலக்கியத்தில் அடுக்கு மொழியில் இருந்து சாதாரண புழங்கு தமிழுக்கு வந்து......... எல்லோருக்கும் புரிகிற மாதிரி எழுதுவதில் இருந்து ஒரு சிலருக்கு மட்டும் புரியும் படி எழுதி கடைசியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக புரியும் படி எழுதுகிற வரை கடந்து சென்று கொண்டிருக்கிறது இலக்கியம்.எவ்வளவு து£ரம் கடந்து வந்தவர்களாக நாம் இருந்தாலும் சரி. அது இலக்கியமானாலும் அரசியலானாலும் இரண்டும் சேர்ந்த கலவையானாலும். கடந்து கடந்து வந்திருந்தாலும், நாமெல்லாம் ஓட்டலில் அல்லது வீட்டில்தான் சாப்பிடுவோம். நேரா நேரத்திற்கு சாப்பிடாமல் இருக்கலாம். தெருவில் பிச்சைக்காரர்களோடு உட்கார்ந்து நம்மால் சாப்பிட முடியாது. பணம் இல்லாவிட்டால் யாரிடமாவது கடன் கேட்போம். பிக் பாக்கெட் அடிக்க நம்மால் முடியாது.இதுதான் விளிம்பு நிலை மனிதர்களுக்கும் நமக்கும் இருக்கும் வித்தியாசம்.அதேசமயத்தில் மற்றவர்களை போல விளிம்பு நிலை மனிதர்களை நாம் மோசமானவர்களாக பார்ப்பதில்லை. பரிதாபத்திற்குரியவர்களாக அல்லது ரசிப்புக்குரியவர்களாகப் பார்க்கிறோம். ஏனெனில் நாம் கடந்தவர்கள் இல்லையா?எங்கோ ஒரு மொட்டை மாடியில் நின்று கொண்டு அந்த மனிதர்களை பார்க்கிறோம். சின்னக்குழந்தைகள் சர்க்கசில் வரும் மிருகங்கள் குறித்து பயப்படுவதில்லை. அருவருப்பதுமில்லை. கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றன.இப்படித்தான் எழுத்தாளர்களான சிலர் அந்த மனிதர்களை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.நீங்கள் அப்படி இருக்கலாம். ஆனால் ஷக்ரி அப்படி அல்ல என்று நீங்கள் எழுதியிருப்பதில் இருந்து தெரிகிறது. ஏனெனில் ஷக்ரி மொட்டை மாடியில் நின்றவர் அல்ல. அவர் தெருவில் அந்த மனிதர்களில் ஒருவராக இருந்தவர். அந்தக்கூட்டத்தில் அவர் இருந்தவரையில் அவரை நாம் கவனிக்கவில்லை.கடைசியாக ஒருநாள் அவர் அவரைப்பற்றியே எழுதுவதற்கு நம்மோடு மொட்டை மாடிக்கு வந்து விட்டார். நம் கூட்டத்தில் சேர்ந்ததற்கு பிறகுதான் நமக்கு அவரை அடையாளம் தெரிந்தது. எது எப்படியோ ஷக்ரியின் வாழ்க்கை, அந்த எழுத்துக்கள் எத்தனைதான் துன்பங்கள் நிறைந்ததாக இருந்தாலும் நமக்கு அலுக்கவே இல்லை. ஷக்ரிக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். துன்பமான வாழ்க்கையை எப்படி அலுக்காமல் ரசிக்கிறாய் என்று கேட்டு விடாதீர்கள். அதைக்கூட ரசிக்கும் படி எழுதும் ஆற்றல் ஷக்ரிக்கும் உங்களுக்கும் உண்டு. துன்பமோ இன்பமோ அடுத்து என்ன என்ற சுவாரஸ்யத்துடன் வாழ்க்கை செல்ல வேண்டும் அவ்வளவுதான்.

நமக்கெதுக்கு வம்பு
எழுத்தாளர் சாருநிவேதிதா இரவு மூன்று மணிவரையில் பேய் மாதிரி உட்கார்ந்து வலைத்தளத்திற்கு எழுதுகிறாராம். அவரைப் படிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர் எழுதுகிறார். நீ எதற்கு மூன்று மணிக்கு எழுந்து து£க்கத்தை கெடுத்துக்கொள்ள வேண்டும் என்றான் நரேன். அதுவும் உண்மைதான். ஆனால் எனது எழுத்துக்களை யாரையாவது எப்படி படிக்க வைப்பது? என்று கேட்டேன்.உனது எழுத்துக்களை யாரவாது ஏன் படிக்க வேண்டும்? அவர்கள் அதை படிக்க வேண்டும் என்று என்ன அவசியம் வந்தது?சிவாவின் எழுத்துக்களை படிக்காவிட்டால் உங்களுக்கு நரகம்தான் என்று யாராவது தமிழ்வாசகர்களை பயமுறுத்தியிருக்கிறார்களா?.ஏற்கனவே ஏராளமான எழுத்தாளர்கள் பல்வேறு விதமாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இதில் சிவா தனித்துவமாக என்ன எழுதப்போகிறான்? நரேன் இப்படி சொன்னதை கேட்டதும், நமக்கெதுக்கு வம்பு என்று இருந்தது.............காலையில் எழுந்து குளித்து சூடாக இரண்டு இட்லி தின்றுவிட்டு அவசர அவசரமாக இருசக்கர வாகனத்தில் பயணித்து, அலுவலகத்தில் போய் அமர்ந்து சில வேலைகளை பார்த்து, சக ஊழியர்களுடன் சமீபத்தில் வந்த நாடோடிகள் அல்லது வேறு ஏதாவது ஒரு படத்தை பற்றி பேசிவிட்டு, மாலையில் சில நண்பர்களுடன் ஒயின்ஷாப்பில் அமர்ந்து சில கவிதைகள், இளையராஜாவின் பாடல்கள், ஒரு சில நேரஙகளில் ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் பற்றி பேசிவிட்டு எப்போது எப்படி போய்ச்சேர்ந்தோம் என்று தெரியாமல் வீடு போய்ச் சேர்ந்து படுத்து, மறுபடி காலையில் எழுந்து குளித்து...............இப்படியாக வாழ்க்கையை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் ஓட்டிக்கொண்டிருப்பதே சாலச்சிறந்தது என்று பட்டது.
செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009
யாரும் வரவில்லை
பொதுவாக திருமணம் போன்ற விஷேசங்களுக்கு உறவினர்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள¢ என்று எல்லோரையும் அழைப்போம். நிறையப்பேர் வர வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்போம். கூட்டம் நிறைய வந்தால்தான் அந்த விருந்துக்கு மதிப்பு. அப்படித்தான் வலைமனையை ஆரம்பித்து வைத்து விட்டு யாருமே வரவில்லையே என்று ஏக்கத்தோடு உட்கார்ந்திருக்கிறேன்.கூகுள் தேடல் சாதனம் வழியாக எதையாவது தேடினால் ஏதாவது கிடைக்கிறது. அப்படி தேடிக்கொண்டிருப்பவர்கள் கண்களில் இந்த இணைய தளம் பட்டு விட்டால் நன்றாக இருக்கும். எதையோ தேடிக்கொண்டு போகிறவர்களின் கண்களில் தட்டுப்படவும், தட்டுப்பட்டவுடன் அந்த நபரை கவரவும் ஏதோ சில சூட்சுமங்கள் இருக்கிறது. அது எனக்கு தெரியவில்லை. யாராவது வலைமனை பற்றி நன்கு தெரிந்தவரை விசாரித்தால் தெரியும்.இதை யாராவது பார்க்க நேர்ந்தால், இந்த வலை மனையை வைத்துக்கொண்டு என்னென்ன செய்யலாம் என்ற சாத்தியக்கூறுகளை குறித்து சொல்லுங்களேன்.
லேபிள்கள்:
ஏக்கத்தோடு உட்கார்ந்திருக்கிறேன்
செவ்வாய், 28 ஜூலை, 2009
வழக்கொழிந்து வரும் வர்ணனையாளர்கள்
வலைத்தளம் ஆரம்பித்து உடனடியாக ஒரு பத்தி எழுதினேன். அதன்பிறகு எழுத நேரம் கிடைக்கவில்லை. மற்றொரு எழுத்து வேலை. நான் தமிழ்வாசல் என்ற பத்திரிகையின் பொறுப்பாசியரியராக இருப்பதால், அந்த பத்திரிகை வேலைகள் எனது நேரத்தை எடுத்துக்கொண்டன. மேலும் தற்போது புத்தகம் ஒன்று எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்றுதான் கொஞ்சம் நேரம் கிடைத்தது வலையில் எழுத.தலைப்பை பார்த்ததும், தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் உங்களது நினைவுக்கு வந்தால் அதை அகற்றி விடுங்கள். நான் சொல்ல வந்தது, வர்ணனை மற்றும் அடுக்குமொழி எழுத்தாளர்களைப்பற்றி.சமீபகாலமாக வர்ணனை நடைகள் தமிழ் எழுத்துச்சூழலை விட்டு மறைந்துகொண்டிருப்பது போல தோன்றுகிறது. சொல்ல வருவதை சுருக்கமான வார்த்தைகளில் சொல்வதுதான் நல்ல எழுத்து என்ற பக்குவம் தமிழர்களுக்கு வந்திருக்கிறது. அண்ணா, கலைஞர், வைரமுத்து போன்ற வர்ணனை எழுத்தாளர்கள் தற்போது அந்தக்காலத்து எழுத்தாளர்களாகி விட்டனர்.கவிதையில் வர்ணனை இருக்கட்டும். உரைநடையில் அது வேண்டாம் என்ற முடிவுக்கு வாசகர்கள் வந்து விட்டதை போல தோன்றுகிறது. நாஞ்சில் நாடன், வண்ணதாசன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களின் எழுத்துகள் சமீபகாலமாக பிரபலமாகிக்கொண்டிருப்பதில் இருந்தே அது தெரிகிறது.மேலும் நாவல்கள், சிறுகதைகள் போன்றவற்றிற்கு ஒரு காலத்தில் இருந்த மதிப்பு தற்போது இருக்கிறதா என்பதும் கேள்விக்குறிதான்.பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களில் கவிதை, கதை போன்ற புத்தகங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தலைவர்களின் சரித்திரங்கள், நாடுகளை பற்றிய செய்திகள், அறிவியல் தொடர்பான விஷயங்கள், சுயமுன்னேற்ற நு£ல்கள், இன்னும் மருத்துவம், உடல் நலம் என்று புத்தகங்களின் உள்ளடக்கங்கள் மாறியிருக்கின்றன.இது தமிழ் வாசகர்கள் மத்தியில் கற்பனைகளை விட்டு புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் மேலோங்கியிருப்பதையே காட்டுகிறது. நன்று.
புதன், 22 ஜூலை, 2009
புதிதாக ஒரு வலைப்பதிவு
புதிதாக ஒரு வலைப்பதிவை உருவாக்கியதும் என்ன எழுதுவதென்று தெரியவில்லை. முன்பெல்லாம் நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைத்துக்கொண்டு, எனக்கு பிடித்த நண்பர் அன்சாரியிடம் அதை து£க்கிச் செல்வேன். அவரிடம் படித்துக்காண்பிப்பேன். பெரிய எழுத்தாளன் போல எழுதியிருக்கிறாய் என்று பாராட்டுவார்.அப்போதெல்லாம் நிறைய எழுதினேன். இப்போது அது எதுவும் என் கைவசம் இல்லை. பள்ளிப்படிப்பு முடித்த நேரத்தில் பலருக்கு நடிகராக வேண்டும். இயக்குனராக வேண்டும் என்று கனவு வரும். அதன்பிறகு அவர்கள் கல்லு£ரிப்படிப்புக்கு போவார்கள். சிலர் படிக்க முடியாமல் வேலைக்கு போவார்கள். அதற்கு பிறகு திருமணம். மனைவி குழந்தைகள். பெண்களாக இருந்தால் கணவன் குழந்தைகள். இப்படியாக அவர்களது வாழ்க்கை ஒரு வளையத்திற்குள் சிக்கி இயக்குனர் கனவும் நடிகர் கனவும் சும்மா எப்போதாவது நினைத்துப்பார்க்கும் ஒன்றாகி விடும். அப்படித்தான் என் கதையும்.எனக்கு மட்டும் திருமணம் ஆகாதா என்ன-?இப்போது கொஞ்சம் நேரம் இருக்கிறது. வலைப்பதிவில் எழுதுவது சுலபமாகவும் சுகமாகவும் இருக்கிறது. இதை இப்படியே தொடரலாம் என்றிருக்கிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)